தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. முதல் சீசனைப் போல நிகழ்ச்சி ஒர்த் இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்தாலும், கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் பரபரப்பான காட்சிகள் அறங்கேறி வருகிறது.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மூலம் தான் இத்தகைய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. காதல், ஊடல், கசமுசா என்று இருந்த போட்டியாளர்கள் தற்போது சண்டை, கோபம் என்று டென்ஷனோடு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், வெகுளித்தனம் கொண்ட சென்ராயன், திடீரென்று வேறு ஒரு மனிதராக ஆகியிருக்கிறார். இன்றைய எப்பிசோட்டில் அவர் நடந்துக் கொண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விளையாட்டுத் தனமாக இருக்கும் சென்ராயன், இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோட்டில் ஐஸ்வர்யா முடியை பிடித்து அவரை இழுத்துக் கொண்டு போவதோடு, முக பாவனைகளை வித்தியாசமாக காட்டவும் செய்கிறார்.
இதனை பார்க்கும் போது, இது தான் சென்ராயனின் உண்மையான குணமாக இருக்கலாம் என்றும், வெளித்தனமாக அவர் இருப்பது நடிப்பு என்றும் கூறப்படுகிறது.
இதோ அந்த புரோமோ,
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/isNSNSg3mv
— Vijay Television (@vijaytelevision) August 16, 2018
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...