‘வனமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கும் சாயீஷா, தான் தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி ஹீரோயின், வனமகன் படத்தை தொடர்ந்து ஜுங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் என்று தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் இவரது கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கின்றன.
சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோட்டி போட தொடங்கியிருக்கும் சாயீஷா, சமீபத்தில் தனது 21 வது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடினார். இதற்காக நடிகர் நடிகைகளை அழைத்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பார்ட்டியும் வைத்தார்.
இந்த நிலையில், சாயீஷா நடிகர் கம் இயக்குநர் ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக தகவல் தீயாக பரவி வருகிறது.
ஆரம்பத்தில் கிசுகிசுவாக பரவிய இந்த தகவல் தற்போது ஆயீஷா காதலில் விழுந்தார், என்ற தலைப்பு செய்தியாகவே சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
நடனத்திற்கு பெயர் போன அந்த நடிகர் கம் இயக்குநர் தன்னுடன் நடிக்கும் அனைத்து ஹீரோயின்களுடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், சாயீஷாவுடனும் தற்போது கிசுகிசுக்கப்படுவதால் கோடம்பாக்கமே அதிர்ச்சியடைந்திருக்கிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...