தமிழ் சினிமாவில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஆனால், தொடக்கமே அவருக்கு கவலை அளிக்கும் வகையில் தான் அமைந்தது.
‘நாயகி’ என்ற ஹாரர் படத்தில் நடித்தவர் அப்படம் தோல்வியடைந்ததால் சற்று கவலையடைந்தவர், சமீபத்தில் வெளியான ‘மோகினி’ படமும் படு தோல்வி அடைந்ததால் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.
அப்படி அப்செட்டாக இருந்த திரிஷா, தற்போது உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருக்கிறார். இதற்கு காரணம் ரஜினிகாந்த் தான்.
ஆம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் திரிஷாவும் நடிக்கிறாராம். ஏற்கனவே சிம்ரன் ஒரு ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது திரிஷாவும் ஒரு ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் இளம் வயது வேடத்திற்கு திரிஷா ஜோடியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கலுடன் ஜோடி சேர்ந்து நடித்த திரிஷா, ரஜினியுடன் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக இருந்தும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் திரிஷாவுக்கு எப்போதும் உண்டு. பல பேட்டிகளில் அவரே இதை கூறியிருக்கிறார்.
தற்போது அந்த கவலை கலைந்துபோகும் விதத்தில் அவர் ரஜினி படத்தில் கமிட் ஆகியிருப்பதால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...