தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயந்தாரா, தற்போது நடிகைகளுக்குடன் போட்டி போடாமல் நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார். விஜய், அஜித் படங்களைப் போல நயந்தாராவின் படங்கக்கும் தமிழகம் முழுவதும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், அவரது படங்கள் பெரிய அளவில் வெளியாகின்றது.
அதன்படி, இன்று வெளியாகியிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ சுமார் 402 திரையரங்கங்களில் வெளியாகியிருக்கிறது. அஜித், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள் தான் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாகும் என்ற நிலையை மாற்றி, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தையும் இத்தனை தியேட்டர்களில் வெளியிடும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நயந்தாரா உண்மையாகவே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ தான் என்று கோலிவுட்டே புகழ்ந்து வருகிறது.
தியேட்டரின் எண்ணிக்கை மட்டும் அல்ல, முன்னணி ஹீரோக்களின் படங்கள் முதல் நாளில் எப்படி அதிகாலை திரையிடப்படுமோ அதுபோல, ‘கோலமாவு கோகிலா’ படமும் இன்று சென்னையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அதிகாலை 6 மணிக்கே சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
அதிகாலை என்றும் பாராமல் நயந்தாராவின் படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியதை பார்த்து தியேட்டர்கள் உரிமையாளர்கள் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த கோடம்பாக்க இண்டஸ்ட்ரியே ஷாக்காகிவிட்டதாம். இதில் பெண்கள் கூட்டம் ஏராளம் என்பது கூடுதல் செய்தி.
படம் ரிலீஸானதெல்லம் ஓகே, ரிசல்ட் எப்படி என்பதை பார்க்கலாம், என்று படம் முடிந்த பிறகு ரசிகர்களிடம் கேட்டால், “சூப்பர்...நயந்தாரா மாஸ்...” என்று கத்துகிறார்கள். இளசுகள் தான் இப்படி என்றால், சில முத்த பெண்களிடம் கேட்டதற்கு, “ரொம்ப நல்ல படம், குடும்பமாக பார்த்து சிரிக்கலாம்..” என்று சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்.
மொத்தத்தில், ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் தான் லேடி சூப்பர் ஸ்டார் மட்டும் அல்ல, வசூல் ராணி என்றும் நயந்தாரா நிரூபித்துவிட்டார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...