தொடர் கன மழையின் காரணமாக கேரளா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி வரை அம்மாநில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்திருக்கும் மக்கள் அத்தியாவாசிய பொருட்கள் சரியாக கிடைக்காமல் கஷ்ட்டப்பட்டு வருகிறார்கள். அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கை மூலம் மக்களை காப்பாற்றுவதோடு, அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உரிய உதவிகளை செய்து வருகிறது.
அதே சமயம், கேரளாவுக்கு உதவி கரம் நீட்ட விரும்புபவர்கள் நிதி வழங்கலாம், என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மலையாள திரையுலகினர் மட்டும் இன்றி, தமிழ்த் திரையுலகை சேர்ந்த பலர் கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்கி வருகிறார்கள்.
ஏற்கனவே நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல், நடிகை ஸ்ரீபிரியா, ரோகிணி ஆகியோர் கேரள வெள்ள நிவாரண நிதி வாழங்கியுள்ள நிலையில் தற்போது தனுஷும், விஜய் சேதுபதியும் நிதி வழங்கியுள்ளார்கள்.
நடிகர் தனுஷ் ரூ.15 லட்சத்தை கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அதேபோல், நடிகர் சித்தார்த்தும் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
மேலும், பல தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் கேரளாவுக்கு நிதி வழங்குவாரக்ள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...