தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக மட்டும் இன்றி, முதல் நிலை மாஸ் ஹீரோவாகவும் விஜய் உருவெடுத்திருக்கிறார். அவரது படங்கள் என்றால் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு ஏற்படுவதை விட அரசியல்வாதிகளிடம் அதிகமாகவே எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வரும் விஜய், அப்படத்தின் ஆரம்பத்திலேயே பலவித எதிர்ப்புகளை எதிர்கொண்டு, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இம்மாத இறுதியில் ‘சர்கார்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.
‘சர்கார்’ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 63 வது படத்தை இயக்க போகும் இயக்குநர்கள் குறித்து பல யூகங்கள் வெளியாகி வந்த நிலையில், இறுதியில் அட்லீ தான் அந்த இயக்குநர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
‘தெறி’, ‘மெர்சல்’ என விஜய்க்கு தொடர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ என்றாலும், ‘மெர்சல்’ படத்தில் அவர் பட்ஜெட்டை அதிகப்படுத்தியதாக குற்றச்சாட்டு அவர் மீது விழுந்தது. இதனால், திரையுலகில் சில தயாரிப்பாளர்கள் அவரை நேரடியாக விமர்சித்தார்கள். ஆனால், எதற்கும் பதில் அளிக்காத அட்லீ, தனது படம் மூலமாகவே பதிலளிப்பேன், என்ற ரீதியில் அமைதிகாத்து வந்தார்.
தற்போது விஜயுடன் மூன்றாவது முறையாக கைகோர்த்திருக்கும் அட்லீ, இந்த முறையும் விஜய்க்கு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்கும் முனைப்பில் இருந்தாலும், தற்போது அவர் மீது ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்பால் சற்று பயந்துபோகியிருக்கிறார்.
விஜயை மீண்டும் இயக்குவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ, நான் பொதுவாக பயப்பட மாட்டேன். ஆனால், இம்முறை தன்னம்பிக்கையும், பொறுப்பும் அதிகமாகி உள்ளது. திரும்பவும், இந்த தடவை என்ன செய்யப் போகிறேன் என்ற பிரச்சினை வந்துள்ளது. சில தினங்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தே வந்தேன். ஆனால், இப்போது ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது, என்று தெரிவித்துள்ளார்.
அட்லீ மீது யார் என்ன சொன்னாலும், அவர் மீது விஜய்க்கு பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறதாம். காரணம், தெறி, மெர்சல் இரண்டு படங்களையும் அட்லீ கையாண்ட விதம் விஜய்க்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...