தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால், மலையாலம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதேபோல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க தொடங்கிய அமலா பால், படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கி கையை உடைத்துக் கொண்டார்.
இதனால், படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அமலா பால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்காக களத்தில் இறங்கியுள்ளார்.
தனது உடைந்ததை கூட பொருட்படுத்தாத அமலா பால், தன் சொந்த ஊர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்களை வாங்கி கேரளாவுக்கு அனுப்பியுள்ளார். குறிப்பாக பெண்களுக்கு தேவைப்படும் பொருட்களை அதிகமாக வாங்கி அவர் அனுப்பியிருக்கிறார்.
அமலா பால் நினைத்திருந்தால் பணத்தை கொடுத்து யாரையாவது வாங்கி அனுப்ப சொல்லியிருக்கலாம், ஆனால் அவரே நேரடியாக கடைகளுக்கு சென்று இந்த சமயத்தில் பெண்களுக்கு எந்த பொருட்கள் முக்கியமாக தேவைப்படுமோ அப்பொருட்களை வாங்கியிருக்கிறார்.
தனது உடைந்த கையோடு அமலா பால் கடைகளில் பொருட்கள் வாங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
நடிகர்கள் பலர் தங்கள் ரசிகர்கள் மூலம் கேரள மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், நடிகை ஒருவர் நேரடியாக மக்களுக்கு உதவி செய்வது, அதுவும் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் அதை பொருட்படுத்தாமல் உதவி செய்வதை மக்கள் வரவேற்றுள்ளார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...