கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கன மழையால் வரலாறு காணாத வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம், மண் சரிவால் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில், கணக்கில் வராத உயிர் சேதங்கள் எவ்வளவோ என்பது தெரியவில்லை.
இன்னமும் மழை விடாமல் பெய்து வருவதால் மக்கள் பீதியடைந்திருக்கும் நிலையில், கேரளாவுக்கு உதவ பல சினிமா பிரபலங்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.
சூர்யா, கார்த்தி, கமல், விஷால், சித்தார்த், விஜய் சேதுபதி, தனுஷ், நடிகைகள் ரோஹினி, ஸ்ரீபிரியா என்று பலர் கேரள வெள்ளா நிவாரண நிதி வழங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
நயந்தாராவின் நடிப்பில் நேற்று வெளியான ‘கோலமாவு கோகிலா’ மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், கேரள மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பால், தனது படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை நயந்தாரா தவிர்த்திருக்கிறார்.
‘அறம்’ படத்தின் ரிலீஸீன் போது தியேட்டர்களுக்கு நேரடியாக விசிட் செய்த நயந்தாரா, ‘கோலமாவு கோகிலா’ படத்திற்காகவும் தியேட்டர்களுக்கு விசிட் செய்ய திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ள சேதத்தால் தனது திட்டத்தை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...