முன்னணி ஹீரோக்களின் படங்களே சில தட்டு தடுமாறி கரையேறும் தற்போதைய தமிழ் சினிமாவில் நயந்தாராவின் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதோடு வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதைப் பார்த்து ஒட்டு மொத்த கோலிவுட்டே சற்று அதிர்ச்சியடைந்திருக்கிறது.
கடந்த 17 ஆம் வெளியான நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் மெஹா ஹிட் படம் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளது. படம் வெளியீடே பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், படமும் தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
நயந்தாராவின் நடிப்பு, யோகி பாபுவின் காமெடி, கதாப்பாத்திர தேர்வு, கதைக்களம் என்று ஒட்டு மொத்தப் படமும் வயது வித்தியாசமின்றி அனைவரும் ரசிக்கும்படியாக இருப்பதால் பல இடங்களில் ஹவுஸ் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ’கோலமாவு கோகிலா’ படத்தை மக்கள் கொண்டாடுவது போல திரையுலகினரும் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார்.
படத்தை பார்த்து மிகவும் ரசித்தவர் ‘கோலமாவு கோகிலா’ படக்குழுவினர் ஒவ்வொருவரையும் தொலைபேசி மூலம் அழைத்து பேசி பாராட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராவை பாராட்டியதை அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...