தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக கன மழை பெய்து வரும் கேரளாவில் வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். தற்போது மழை நின்றிருந்தாலும், தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு பல நடிகர் நடிகைகள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
கேரளாவில் தமிழ் நடிகர்களின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அதிலும் விஜய்க்கு கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதோடு, அவரது அனைத்து படங்களும் அங்கே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்துவிடும்.
தமிழகத்தைப் போல கேரளாவின் பல பகுதிகளில் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்தது தான். அதனால் தான் கேரள வெள்ளத்திற்கு நடிகர் விஜய் என்ன உதவி செய்யப்போகிறார், என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், எந்த நடிகரும் கொடுக்காத அளவுக்கு நடிகர் விஜய், கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.70 லட்சம் வழங்கியுள்ளார். விஜயின் இந்த உதவிக்கு கேரள மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...