பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கும் படம் ‘மதுரை வீரன்’. இதில் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார்.
வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் விஜயகாந்த் வெளியிட்ட நிலையில், இப்படத்தின் டிரைலரைப் பார்த்து வியந்து போன, ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.சீனிவாச குரு, தமிழகம் முழுவதும் இப்படத்தினை வெளியிடும் உரிமையை வாங்கிவிட்டார். இதன் நிர்வாக தயாரிப்பை ஆர்.பி.பிலிம்ஸ் ஆர்.பி.பாலா கவனிக்கிறார்.
ஒரு திரைப்படம் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையிலும் வியாபாரம் என்பது குதிரை கொம்பாக இருக்கும் தற்போதைய சூழலில், படப்பிடிப்பு முடியும் முன்பே படம் வியாபரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக புதுமுகம் மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். மற்றும் வேல ராமமூர்த்தி, மைம் கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...