சினிமாவில் பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கும் இருப்பது குறித்து பல நடிகைகள் பேசி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி, இந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் புகார்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் மீது புகார் கூறுவதோடு, தமிழகத்தில் செட்டிலாகி, தமிழ்ப் படங்களில் நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
ஸ்ரீ ரெட்டி தனது செக்ஸ் புகார் மூலம் எப்படி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தினாரோ அது போல, ஹாலிவுட் சினிமாவிலும் நடிகை ஒருவர் தயாரிப்பாளர் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் தான் ஆசியா அர்ஜெண்டோ. இவர் ஹாலிவுட் தயாரிப்பாளர் வெய்ன்ஸ்டீன் மீது பல செக்ஸ் புகார்களை கூறி வந்தார்.
இந்த நிலையில், நடிகை ஆசியா அர்ஜெண்டோ இளம் நடிகர் ஒருவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டை சேர்ந்த இளம் நடிகர் ஜிம்மிம் பென்னட். 17 வயதாகும் இவர் மீது காதல் கொண்ட ஆசியா கலிபோர்னியாவில் ஓட்டல் ஒன்றில் அவரை மது போதைக்கு ஆளாக்கி அவருடன் செக்ஸ் வைத்துக் கொண்டாராம்.
இதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நடிகர் ஜிம்மிக்கு 3.5 மில்லில்யன் டாலர்கள் நஷ்ட ஈடு கொடுக்கும்படி வழக்கு போடப்பட்டதாம். ஆனால், 3.80 லட்சம் டாலர்கள் கொடுத்து ஆசியா பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தாராம்.
தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் வைரலாக பரவி வருவதோடு, செக்ஸ் புகார் கூறிய நடிகையே இப்படி இளம் நடிகருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...