தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னிந்திய சினிமா அனைத்திலும் தனது நடிப்பால் தனது வெற்றிக் கொடியை பறக்கவிட்டிருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிப்பு மட்டும் இன்றி திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் இயக்கம் என்று பிஸியாக இருக்கிறார்.
பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் பிரகாஷ்ராஜ், தற்போது ‘60 வயது மாநிறம்’ என்ற படத்தில் வயதான கெட்டப்பில் நடித்திருக்கிறார். ஏற்கனவே பல படங்களில் வயதான வேடங்களில் அவர் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு ஸ்பெஷல்.
ராதா மோகன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, ஹீரோயினாக இந்துஜா நடித்திருக்கிறார்.
இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட பிரகாஷ்ராஜ் பேசுகையில், “60 வயது மாநிலம்’ கன்னடத்தில் உருவான கதை. இதை நான் படமாக எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே கன்னடத்தில் படமாக உருவாகிவிட்டது. பிறகு தமிழில் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று உடனே ரைட்ஸை வாங்கிவிட்டேன். சில வேலைகள் இருந்ததால், இந்த படம் எடுக்க தாமதமானது, அப்போது கலைப்புலி தாணு சார் இந்த படத்தை தயாரிக்க விரும்பினார். அவர் கேட்டதும் உடனே நான் கொடுத்துவிட்டேன். காரணம், ஒரு படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் அவரைப் போல யாரும் இருக்க முடியாது.
நான் தயாரிப்பாளராக பல படங்களை, அதுவும் நல்ல திரைப்படங்களை தயாரித்திருக்கிறேன். ஆனால், அந்த படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் எனக்கு தெரியவில்லை. நல்ல கதைகளை கேட்டு, அதை நல்லபடியாக தயாரித்த எனக்கு, அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வித்தை மட்டும் தெரியவில்லை, அதை மட்டும் என்னால் இதுவரை செய்ய முடியவில்லை. ஆனால், அந்த வித்தையை மிக சரியாக செய்ய கூடியவர் மட்டும் அல்லாமல் அதில் முதன்மையானவராக இருப்பவர் தாணு சார். அதனால் தான் அவரிடம் இந்த படத்தை ஒப்படைத்தேன்.
என்னுடன் நடித்த விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி என அனைவரும் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது மக்களுக்கான படம், மக்கள் நிச்சயம் இந்த படத்தை வரவேற்பார்கள்.” என்றார்.
இயக்குநர் ராதாமோகன், நடிகை இந்துஜா, விக்ரம் பிரபு என அனைவரும் பேசும் போது, தயாரிப்பாளர் தாணு ஒரு படத்தை எப்படி விளம்பரம் செய்து அதை மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்ப்பார், என்பது குறித்து பேசியதோடு, இந்த படம் அவர் தயாரித்திருப்பதால், நிச்சயம் மக்களிடம் எளிதியில் போய் சேர்ந்துவிடும், என்றும் கூறினார்கள்.
தயாரிப்பாளர் தாணு பேசும் போது, “பிரகாஷ்ராஜுடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாக நினைத்தேன். அது இந்த படத்தில் நிறைவேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதையை கேட்டவுடன், இதை படமாக நாம் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அப்பா, மகன் இடையிலான ஒரு உணர்வு பூர்வமான படம். கன்னடத்தில் வரவேற்பை பெற்றதை விட தமிழில் இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெரும்.” என்று தெரிவித்தார்.
இப்படத்திற்காக இளையராஜா போட்டிருக்கும் பாடல்களும், பின்னனி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், என்று கூறிய இயக்குநர் ராதாமோகன், இப்படத்தின் மூலம் இளையராஜா சாருடன் பணிபுரிந்தது மற்றும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பணியாற்றியது, என இவ்விரண்டும் என் வாழ்வில் நிகழ்ந்த சிறப்பான சம்பவங்கள், என்றும் கூறினார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த யு சான்றிதழ் பெற்றிருக்கும் ‘60 வயது மாநிறம்’ வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...