’வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மனீஷா யாதவ், தொடர்ந்து பல நல்லப் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தவர், சமீபத்தில் வெளியான ‘ஒரு குப்பைக் கதை’ படத்தில் நடித்து அனைவரிடமும் பாராட்டு பெற்றார். அப்படம் எந்த அளவுக்கு பாராட்டு பெற்றதோ அதை விடவும் கொஞ்சம் அதிகமாகவே மனீஷா யாதவி நடிப்பு பாராட்டு பெற்றது.
தற்போது தமிழ் சினிமாவில் 5 வருடங்களை நிறைவு செய்திருப்பவர், கதை தேர்வில் நிதானத்தை கடைப்பிடித்து, நல்ல கதை மற்றும் நல்ல கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இது குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொண்ட மனீஷா யாதவ், “பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், கரு.பழனியப்பன்.. என வரிசையாக முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்களுடையது. அந்த வகையில் நிஜமாகவே நான் ரொம்ப லக்கினு தான் சொல்வேன். ’வழக்கு எண்’ நடிச்சிட்ருக்கும் போதே எனக்கு ’ஆதலால் காதல் செய்வீர்’ வாய்ப்பு கிடைச்சது. அதே போலதான் ’ஜன்னல் ஓரம்’ படமும். இந்த மூன்று படமுமே எனக்கு மொத்த சினிமாவையும் கத்து கொடுத்திடுச்சு. அங்கிருந்து தான் நான் ‘ஒரு குப்பைக் கதை’ படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்துக் கொண்டேன்.” என்றார்.
தமிழ் சினிமாவில் இந்த 5 ஆண்டுகளில் நடிப்பு மட்டும் இன்றி பிழை இல்லாமல் தமிழ் பேசவும் கற்றுக் கொண்டிருப்பவர், தனது மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க விரும்புவதில்லையாம். படத்தில் வெறும் பொம்மையாக வந்து போவதை விரும்பாதவரி, தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும், என்று எதிர்ப்பார்க்கிறார். இதில் பிடிவாதமாக இருப்பவர், இதற்காகவே பல படங்களில் வாய்ப்புகளையும் இழந்திருக்கிறாராம்.
பல பட வாய்ப்புகள் வந்தாலும் கதை தேர்வில் கவனமாக செயல்படும் மனீஷா யாதவ், முன்னணி ஹீரோ ஒருவரது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவும் இருக்கிறாராம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...