தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சோனியா அகர்வால், ’உன்னால் என்னால்’ படம் மூலம் வில்லி அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன் என்ற நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்திருக்கும் இப்படத்தில்
ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குநர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு முகமது ரிஸ்வான் இசையமைக்கிறார். தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். எம்.ஆர்.ரெஜிஷ் எடிட்டிங் செய்ய, விஜய்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார். கெளசல்யா நடனம் அமைக்க, பில்லா ஜெகன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை மணிகண்டன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் ஜெயகிருஷ்ணா கூறுகையில், “பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான்.
தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை, ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.
மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ், ஜெயகிருஷ்ணா மூவரும்.
இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை. இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.
அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம்.
’உன்னால் என்னால்’ படம் வித்தியாசமாக இருக்கும்.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...