பிரபு தேவா நடிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லக்ஷ்மி’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அளவில் பேசப்படும் நடன திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்திருக்கும் குட்டி நடனப் புயல் பேபி தித்யா, இப்படத்தின் மூலம் பெரிய அளவில் பேசப்படுவார் என்பது உறுதி.
இந்த நிலையில், இப்படத்தில் நடித்திருக்கும் பேபி தித்யா, படம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பார், என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா கூறியிருக்கிறார்.
இது குறித்து கூறிய ஸ்ருதி நல்லப்பா, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பார்வையாளர்கள் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிப்பார்கள். ’லக்ஷ்மி’ படத்தில் ரசிகர்களை நிச்சயம் கொள்ளை கொள்வார். படம் பார்த்து முடித்த பின்னர் பார்வையாளர் மனதில் தங்கி, அவர்கள் வீட்டிற்கு மட்டுமே செல்லாமல், அவர்கள் வாழ்வில் ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பார்.”என்றார்.
மேலும் இயக்குநர் விஜய் மற்றும் பிரபு தேவா குறித்து பேசிய ஸ்ருதி, “விஜய் சாரிடம் நான் தனிப்பட்ட முறையில் பார்த்து ரசிக்கும் விஷயம், அவரது திரைப்படங்களில் உள்ள எமோஷனல் விஷயங்களை ஒருபோதும் வெளிப்படுத்த தவறியதில்லை. அதுவே அவரது வெற்றிக்கு பின்னால் ஒரு வலுவான காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரிப்டை படித்தவுடன் நானே இதனை உணர்ந்தேன். கதையின் வலிமையான விஷயமாக நான் நம்பும், கதையில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு சிறிய உணர்வுகளையும் ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது. லக்ஷ்மி திரைப்படம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தாண்டி சில விஷயங்களை வெளிப்படுத்தும்.
பிரபு தேவாவைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது? உலகமே அவரை அறிந்திருக்கிறது. எவ்வளவோ பாராட்டுகள், பட்டங்களை தாண்டி பிரபுதேவா ஒரு நல்ல மனிதர். அவருடன் நடிக்கும் மற்றவர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் மற்றும் ஒரு தயாரிப்பாளர் நலனில் அக்கறை செலுத்தும் குணம் எப்போதும் என் நினைவில் இருக்கும்.” என்றார்.
நாளை முதல் (ஆகஸ்ட் 24) உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘லக்ஷ்மி’ தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...