தென்னிந்திய திரைப்பட மற்றும் டிவி சண்டை இயக்குநர்கள் & கலைஞர்கள் சங்கத்தின் பொன் விழா, வரும் 26 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்கள்.
மேலும், இதுவரை எந்தவிதமான கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத நடிகை காஜல் அகர்வால், முதல் முறையாக ஸ்டண்ட் யூனியன் பொன் விழா கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். இவருடன் 12 முன்னணி நடிகைகள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், 10 முன்னணி ஹீரோக்களும் கலந்துக் கொள்கிறார்கள்.
காமெடியில் கோடம்பாக்கத்தையே தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் நடிகரும், ஸ்டண்ட் கலைஞருமான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் வழக்கமாக இடம்பெறும் பாடல், நடனம் என்று இல்லாமல், ஸ்டண்ட் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது.
ஸ்டண்ட் யூனியன் தலைவர் அனல் அரசு தலைமையில் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக டான்ஸ் மாஸ்டர் கலா செயல்படுகிறார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...