கடந்த இரண்டு வாரங்களாக பெய்த பேய் மழையால் கேரளா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 370 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள அம்மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தற்போது மழை நின்றாலும், தேங்கியிருக்கும் வெள்ள நீரை வெளியேற்றுவது பெரும் சவாலாக அமைந்திருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினர் கேரளாவுக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் கேரளாவுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். முன்னணி நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சித்தார்த், விஷால், கார்த்தி சூர்யா, நடிகைகள் நயந்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று ஏராளமானவர்கள் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நிதி வழங்கியிருந்தாலும், இவர்களில் யாரும் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி வழங்கவில்லை. அதே சமயம், தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதி வழங்கியிருந்தார்கள்.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த தொகைக்கான காசோலையை வரும் சனிக்கிழமையன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அவர் வழங்க இருக்கிறார்.
இதன் மூலம், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதி உதவி செய்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை ராகவா லாரன்ஸ் பெற்றிருக்கிறார்.
இதுவரை வழங்கிய நிதியில் தமிழ் சினிமா நடிகர்களில் நடிகர் விஜய் ரூ.70 லட்சம் வழங்கியதே அதிகமான தொகையாக இருந்த நிலையில், தற்போது லாரன்ஸ் அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...