பிக் பாஸ் சீசன் இரண்டில் வைல்டு கார்டு எண்ட்ரியாக யார் வரப்போவது, என்ற எதிர்ப்பார்ப்புக்கிடையே நேற்று புதுவரவாக நுழைந்தார் விஜயலட்சுமி. பிரபல தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடித்து வந்த இவர், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது பிக் பாஸ் போட்டியாளராக எண்ட்ரியாகியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் நன்கு அறிந்ததை போலவே, அவர்கள் பற்றி மக்கள் என்னவாக நினைக்கிறார்கள் என்பதை விஜயலட்சுமியும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். இது அவருக்கான பிளஸ் ஆக கருதப்படுகிறது. அதே சமயம், விஜயலட்சுமி எப்படி பட்டவர், அவரது குணம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாததால், அவர் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை வெளியான புரமோவில், பிக்பாஸ் விட்டிற்குள் ஜெயிக்க தான் வந்தீர்கள், பிறகு ஏன் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று கூறுகிறீர்கள், என்று டேனியிடம் விஜயலட்சுமி அட்வைஸ் செய்கிறார். டேனியிடம் மட்டும் அல்ல இதுபோல அவர் பலருக்கு அட்வைஸ் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், மஹத், ஐஸ்வர்யா போன்ற போட்டியாளர்களுடன் விஜயலட்சுமி எந்த வித நட்புணர்வோடு பழகுவதில்லை என்பது மஹத் பேசுவதில் இருந்து தெரிகிறது. ஆக, ஒன் சைடாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விஜயலட்சுமியால் வீட்டுக்குள் ஏதோ ஒரு புது பூகம்பம் வருப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...