விவேக் ஹீரோவாகவும், தேவயானி ஹீரோயினாகவும் நடித்திருக்கும் படம் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் இப்படம் தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் மையமாக வைத்து உருவாகியுள்ளது.
கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஹிப் ஹாப் ஆதி, நடிகர்கள் ஆரி, மயில்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். இவர்களுடன் நடிகர் விவேக், தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.பி.விஜி, இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், இப்படத்திற்கு பின்னணி இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும் இதில் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், “இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால் தான் வாழும் கலைவாணராக இருக்கிறார். வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும். முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் எல்லாம் எங்களுக்கு பாடங்கள். அப்படி இந்த ‘எழுமின்’ திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித் தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டு தான். தமிழ் சினிமா நூற்றாண்டு காணும் இந்த காலத்தில் ‘எழுமின்’ திரைப்படம் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வருகிறது. இப்படம் கூறுவதைப் போல, தற்காப்பு கலைகளை மாணவர்கள் அவசியமாக கற்க வேண்டும்.
கோவாவிற்கு திரைப்பட விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ் சினிமாக்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. காரணம் இதைப் போல அழுத்தமான கதைகளுடன் இன்னமும் இங்கு படங்கள் வந்து கொண்டிருப்பதால் தான். எனவே, நம் தமிழ் இளைஞர்கள் ‘எழுமின்’ திரைப்படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.பி.விஜி பேசும் போது, “இரண்டு அமைச்சர் பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். ஒருவர் விளையாட்டுத் துறை, இன்னொருவர் செய்தித்துறை, இவர்கள் முன்னிலையில் ஒரு பணிவான கோரிக்கையை வைக்கிறேன். தயவுசெய்து இந்த ‘எழுமின்’ திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அதற்கு இந்த திரைப்படத்திற்கு ஏதேனும் சிறப்பு அந்தஸ்து வழங்கி, வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும். இதனைக் கேட்பதற்கான காரணம், இந்த திரைப்படம் நிச்சயமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது மாணவர்களுக்கு வழங்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில், இந்தத் திரைப்படத்தில் நடிக்க வந்த பிறகு ‘கிக் பாக்சிங்’கற்றுக்கொண்ட சிறுவன் இப்போது ஸ்டேட் லெவலில் தங்கப் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். தற்காப்பு கலைகளின் முக்கியத்துவத்தை நிச்சயமாக ‘எழுமின்’ திரைப்படம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும்.” என்றார்.,
நடிகர் விவேக் பேசும் போது, “தமிழ்நாட்டில் சமீபமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். ’ஜல்லிக்கட்டு’ போராட்டத்தை முன் நின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள் தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள். நான் 4 பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். முதலாவது, தன்னம்பிக்கையால் உயர்ந்த நடிகர் தனுஷுக்கு. நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து ஒரு பாடலைப் பாடி கொடுத்திருக்கிறார். இரண்டாவது இசையமைப்பாளர் அனிருத்திற்கு. மூன்றாவது நன்றி, இசையமைப்பாளர்கள் ஆதி மற்றும் இமான் இருவருக்கும்.” என்று கூறினார்.
இசையமைப்பாளர் ஆதி பேசும் போது, “விவேக் சார் எனது படத்தில் எனக்கு தந்தையாக நடித்தார். நிஜத்திலும் அவர் என்னிடம் ஒரு தந்தையைப் போல உரிமையோடு தான் நடந்துக் கொள்வார். இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது கூட என்னை அவர் உரிமையோடு தான் அழைத்தார். இந்தியா இளைஞர்கள் அதிகமாக கொண்ட நாடு, அதிலும் மாணவர்கல் அதிகமாக கொண்ட நாடாக இன்னும் சில ஆண்டுகளில் உருவெடுக்க உள்ளது. எனவே நம் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் இந்தியா 2027 ஆம் ஆண்டு வல்லரசு நாடாக நிச்சயம் முன்னேறும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த படமும், படத்தின் பாடல்களும் மாணவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்று தெரிகிறது.” என்றார்.
இசையமைப்பாளர் டி.இமான் பேசும் போது, ”நடிகர் விவேக் சிறந்த நகைச்சுவையாளர், நல்ல மனிதர் என்பதை தாண்டி அவர் சிறந்த மோட்டிவேட்டராக இருக்கிறார். எனது வாழ்விலும் அவர் என்னை மோட்டிவேட் செய்திருக்கிறார். எனக்கு சரியான படங்கள் அமையாதபோது நான் ரொம்பவே கவலைப்பட்டிருக்கிறேன். சில தினங்கள் தனியாக அழுதும் இருக்கிறேன். அப்போது ‘தகதிமிதா’ என்ற படத்திற்கு இசையமைத்திருந்தேன். அந்த பாடல்களை கேட்டுவிட்டு விவேக் சார் எனக்கு போன் பண்ணி என்னை பாராட்டியதோடு, என்னை மோட்டிவேட் செய்தார். அதன் பலனாக தான் தற்போது நான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன். அவர் என்னை இனி எந்த விழாவாக இருந்தாலும் உரிமையோடு அழைக்கலாம். ஆதியிடம் எப்படி உரிமை எடுத்துக் கொள்கிறாரோ அதுபோல என்னிடமும் உரிமை எடுத்துக் கொள்ளலாம்.” என்றார்.
இப்படத்தில் இடம்பெற்ற “எழடா...” என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். அதேபோல் “எழு...எழு...’ என்ற உத்வேக பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இவ்விரு பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...