தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோக்களில் தனது பெயரும் இடம்பெற வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டு வரும் நடிகர் உதயா, ‘ரா ரா’ படத்திற்கு பிறகு சொந்தமாக தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. இதில் ஹீரோயின்களாக பிரியங்கா, ஷேரா, மதுமிதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நாசர், கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, குட்டி பத்மினி, சோனியா போஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
’ஒநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பாலாஜி ரங்கா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘தப்பு தண்டா’ படத்தின் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
ஆஷிப் குராஷி என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் மும்பையில் பல பாலிவுட் படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியதோடு, ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியிருக்கிறார்.
தப்பு பண்ணவங்க யாரும் தப்பிக்க முடியாது. அந்த தப்பு, இன்று இல்லை என்றாலும், என்னைக்கோ ஒருநாள் நம்மையறியாம நம்மை துரத்தி வந்து தண்டனை கொடுக்கும், என்பது தான் இப்படத்தின் கரு.
பேண்டஸி ஹிஸ்டாரிகள் அல்லது சைக்கோ திரில்லர் கமர்ஷியல் என்ற ரீதியில் உருவாகியிருக்கும் இப்படம் பக்கா எண்டர்டெயினர் படமாக உருவாகி இருப்பதாக கூறிய உதயா, மார்க் ஆண்டனி, வாசு, ரவி, மொட்டை, மற்றொரு ஸ்டைலிஷ் ரவி என்று மொத்தம் 5 கெட்டப் போட்டிருக்கிறாராம்.
குதிரை, ராஜா, படை வீரர்கள் என்று படத்தில் ஹிஸ்டாரிக்கல் சம்பந்தமான காட்சிகள் அதிகமாக இருக்கும் இப்படம் ஏலகிரி, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான தயாரிப்பாளர்கல், இயக்குநர்கள் நடிகர்கள் என பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உதயா, ”படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒருவருடன் கூட எனக்கு காதல் காட்சிகள் மற்றும் டூயட் பாடல்கள் கிடையாது. அதேபோல், சினிமாவுல ஜெயிக்க எல்லாருக்கும் ஒரு டைம் வரும். அது இப்ப எனக்கு வந்திருக்குன்னு நம்பறேன்.” என்று தெரிவித்தார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...