தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வரும் நயந்தார், லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட இவரது படங்களும் தற்போது ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக வெற்றி பெற்று வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது வசூலிலும் சக்கைபோடு போடுகிறதாம்.
தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.15 கோடி வசூலித்திருக்கும் இப்படம் கர்நாடகாவில் ரூ.1 கோடி வசூலித்திருக்கிறதாம். வெளிமாநிலத்தில் ஒரு ஹிரோயின் படம் இப்படி ஒரு வரவேற்பை பெறுவது மிகப்பெரிய விஷயம் என்று கூறப்படுகிறது.
தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் ரூ.20 கோடி வசூல் செய்திருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் நயந்தாரா, தான் லேடி சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...