பிரபு தேவாவின் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘லக்ஷ்மி’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, ஊடகங்களிடம் பாராட்டு பெற்றத்தை தாண்டி, தற்போது திரையுலக ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனைந்துக்கொண்டிருக்கிறது.
படத்தில் நடித்திருக்கும் தித்யா உள்ளிட்ட அனைத்து சிறுவர்களின் நடனத்தை ஆச்சரியத்தோடு பார்த்து மகிழ்ந்த பிரபலங்கள் அவர்களிடம் வேலை வாங்கிய இயக்குநர் விஜய் மற்றும் அவர்களுடன் சேர்ந்து நடித்த பிரபு தேவா உள்ளிட்ட மொத்த படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘லக்ஷ்மி’ திரைப்படத்தை சென்னை பிரிவ்யூ திரையரங்கில் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, தனது ஆனந்த கண்ணீர் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, படக்குழுவினரை கட்டித்தழுவி பாராட்டியுள்ளார்.
படத்தின் கடைசி டைட்டில் கிரெடிட்ஸ் முடிவடையும் முன்பே எழுந்து நின்று, இயக்குநர் விஜய் மற்றும் பேபி தித்யா பாண்டே தோள்களை தட்டி கொடுத்து, “நீங்கள் இந்தியாவின் பெருமை” என்று கூறியவர்,
இந்த படத்தில் நடித்த அத்தனை குழந்தைகளையும் பாராட்டினார். "இந்த குழந்தைகள் வேறும் நடனத்தில் மட்டுமல்லாமல், அவர்களது ஆழ்ந்த நடிப்பாலும் அபாரமான திறமை உடையவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். சின்ன சின்ன முக பாவனைகளில் கூட நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்" என்றார்.
இயக்குநர் விஜய் மற்றும் பேபி தித்யா இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்த பாரதிராஜா, தொலைபேசி மூலம் பிரபு தேவாவிடம் பேசியவர், “வார்த்தைகளை கோர்த்து எவ்வாறு உங்களை பாராட்டுவது என்பது எனக்குத் தெரியவில்லை, நீ இந்தியாவின் பொக்கிஷம்” என்று கூறினார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...