‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியின் 3 வது படம் ‘சீமராஜா’. இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்க, சூரி, சிம்ரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் படம் என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, இந்த ‘சீமராஜா’ கூடுதலாகவே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இப்படம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, தலைப்பு வெளியீடு, பஸ்ட் லுக் வெளியீடு, இசை வெளியீடு என அனைத்தையும் வித்தியாசமான முறையில் அனுகிய தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, தற்போது படத்தின் விளம்பரத்தையும் புதிய முறையில் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, ‘சீமராஜா’ படத்தின் ‘கரோக்கி பூத்’ சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள சினிமா திரையரங்குகளில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பூத்துகளில் `சீமராஜா' படத்தின் பாடல்கள், பாடல் வரிகளின் வீடியோ தொகுப்பு, மற்றும் டீஸர் இருக்கும்.
சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் தனி தனியாக அமைக்கப்பட்டுள்ள இந்த பூத்களை பயன்படுத்தி ரசிகர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டும் வகையில், சீமராஜா பட பாடல்களை பாடுவதோடு, டீசருக்கு ஏற்றவாறு டப்மாஷும் செய்யலாம். இவை அனைத்தும் 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியிடப்படுவதோடு, இதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இசையமைப்பாளர் டி.இமானுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் ‘சீமராஜா’ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...