மக்களிடையே பிரபலமாக இருக்கும் சீரியல்களை பிரம்மாண்டாக எடுத்து, சீரியல்களின் போக்கை மாற்றி வெற்றி பெற்றவர் நடிகை ராதிகா. இவர் தயாரித்து நடித்த ‘சித்தி’ சீரியல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். அதை தொடர்ந்து பல சீரியல்களை ராதிகா தயாரித்தாலும், அவை ‘சித்தி’யை போல வெற்றி பெறவில்லை.
இதற்கிடையே, தற்போது ராதிகா தயாரித்து இரட்டை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ‘வாணி ராணி’ சீரியல் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில், விரைவில் அந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. ஏராளமான ரசிகர்களை கொண்ட ‘வாணி ராணி’ சீரியல் முடிவதால் ராதிகாவின் ரசிகர்கள் அப்செட்டானாலும், அடுத்ததாக அவர் புது சீரியலோடு களம் இறங்குவார் என்பதில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ‘வாணி ராணி’ சீரியலில் ராதிகாவின் கணவராக நடிக்கும் பிரித்விராஜ், ராதிகாவையும், அந்த சீரியலையும் கடுமையாக தாக்கி பேசியிருப்பது சீரியல் குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
7 வருடங்களாக ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வரும் பிரித்விராஜ், ‘வாணி ராணி’ சீரியல் என்னை பிடித்த ஏழறை நாட்டு சனி, என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
மேலும், அந்த சீரியலில் எது நடந்தாலும், யார் தொலைந்தாலும் அதை ஹீரோயின் தான் கண்டுபிடிப்பார், மற்றவர்கள் எல்லாம் டம்மியாக தான் இருப்பார்கள். ஹீரோயினை உயர்த்தி காட்டுவது சரி, அதற்கு எங்களை எதற்காக டம்மி பீஸாக காட்ட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியவர், ”என் வாழ்க்கையில் மிக கொடுமையான சீரியல் பயணம் என்றால் வாணி ராணி தான், அந்த படப்பிடிப்பில் மிகவும் கொடுமையை அனுபவித்தேன். என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி தான் வாணி ராணி. சீரியல் இயக்குநருக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை போல, எப்போது பார்த்தாலும் சோகமான காட்சிகளை தான் கொடுப்பார். இன்னும் கொஞ்ச நாளி வாணி ராணி சீரியல் முடிய உள்ளது, இனி தான் எனக்கு நிம்மதி.” என்றும் கூறியுள்ளார்.
இப்படி ராதிகாவையும், சீரியலையும் தாக்கு...தாக்கு...என்று தாக்கிய பிரித்விராஜின் பேட்டியால் ராதிகா உள்ளிட்ட வாணி ராணி டீம் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாரகளாம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...