திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவுக்கு பிறகு அக்கட்சியின் தொண்டர்கள், மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது திமுக-வின் செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலின், கருணாநிதியை அடக்கும் செய்வதற்காக போராடி இடம் பெற்றதை தொடர்ந்து, அவர் திமுக தொண்டர்கள் மனதில் மட்டும் இன்றி தமிழக மக்கள் மனதிலும் குடியேறிவிட்டார்.
மேலும், கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள ஸ்டாலின், முக்கிய நபர்கள் சிலரை கட்சியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் விரைவில் திமுக-வில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் தற்போது திமுக சார்பில் கருணாநிதி மறைவையொட்டி நடத்தப்படும் அஞ்சலி செலுத்தும் விழாக்களில் கலந்துக் கொண்டு பேசி வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் கோவையில் ’மறக்க முடியுமா கலைஞரை’ என்ற தலைப்பில் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பார்த்திபன், கலைஞர் குறித்து தனது நினைவலைகளை பகிர்ந்துக் கொண்டவர், ஸ்டாலின் குறித்து புகழ்ந்து பேசியதோடு, கீழே அமர்ந்திருந்த ஸ்டாலினை மேடைக்கு அழைத்து, ”டானிக் தர போகிறேன்” என்று கூறி கலைஞரின் அடையாளமான மஞ்சள் துண்டை அவருக்கு அணிவித்தார்.
பார்த்திபனின் இத்தகைய நடவடிக்கையால் அவர் விரைவில் திமுக-வில் இணையப் போவதாக கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசுக்கப்பட்டாலும், பார்த்திபன் என்னவோ தனது அரசியல் தெரியாது ஆனால் அரசியல் குறித்து பேச தெரியும் என்று மட்டுமே கூறிவருகிறார்.
இப்படித்தான் நடிகர் கமல்ஹாசன் கூட அரசியலுக்கும் தனக்கும் ஒத்துவராது என்று கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...