தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய் சேதுபதி, படங்களில் நடிப்பதோடு சொந்தமாக திரைப்படங்கள் தயாரித்தும் வருகிறார். ‘ஜுங்கா’ என்ற கமர்ஷியல் படத்தை தயாரித்தவர், அடுத்ததாக ‘மேற்குத் தொடர்சி மலை’ என்ற மக்களின் வாழ்வியல் திரைப்படம் ஒன்றை தயாரித்திருக்கிறார்.
தேனி மாவட்டம் மற்றும் கேரள ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றிய தமிழர்களின் வாழ்க்கை பதிவோடு, அரசியல், விவசாயம் குறித்தும் பேசும் இப்படம் மலைவாழ் மக்களின் துயரத்தையும், சாமாணிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தையும், எதார்த்தமாக காட்டியிருக்கிறது.
கடந்த வாரம் வெளியாக ஊடகங்களில் பெரும் பாராட்டு பெற்றிருக்கும் இப்படம், மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை, என்று படத்தின் இயக்குநர் லெனின் பாரதி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தித்தனர். படத்தின் தயாரிப்பாள விஜய் சேதுபதி, இயக்குநர் லெனின் பாரதி, ஹீரோவாக நடித்த ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, ”லெனின் பாரதி என்ற நல்ல மனிதருக்காக தான் இந்த படத்தை தயாரித்தேன். ஆனால், படம் தயாராகி அதை நான் பார்த்ததும் எனக்கு பெரிய திருப்தி ஏற்படவில்லை, காரணம் என்னுடைய எதிர்ப்பார்ப்பு வேறாக இருந்ததா அல்லது எனக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாதது காரணமா, என்று தெரியவில்லை. ஆனால், படம் குறித்து பத்திரிகைகள் எழுதியபோது தான் இந்த படத்தின் அருமை எனக்கு தெரிகிறது. நானும் ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறேன், என்பதை புரிந்துக்கொண்டேன். ஆனால், இந்த பெருமை அனைத்தும் இயக்குநர் லெனின் பாரதியை தான் சேரும். படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று இயக்குநர் கவலைப்பட்டார். இது வியாபார உலகம், யாரையும் நாம் குறை சொல்ல தேவையில்லை. ஒரு பொருளுக்கு டிமாண்ட் இருந்தால் தான் வியாபாரிகள் தேடி வருவார்கள். தற்போது பத்திரிகை விமர்சனங்கள் மூலம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ டிமாண்ட் உள்ள பொருளாக மாறியிருக்கிறது. இனி வியாபாரிகள் தேடி வருவார்கள்.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசும் போது, “இந்த படம் தயாரானதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிட்டு பிறகு மக்களுக்கு திரையிட நினைத்தோம். அதற்காக பல ஆண்டுகளாக இப்படத்தை ஹார்ட் டிஸ்கில் வைத்து நான் அலைந்துக்கொண்டிருந்தேன். எப்போது படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டி காட்டினேனோ அன்றில் இருந்து அவர்கள் இந்த படத்தை தூக்கி சுமக்க தொடங்கிவிட்டார்கள். என் அது பல ஆண்டின் உழைப்பிற்கு கிடைத்த பலனாகவே இதை நான் கருதுகிறேன். அதே சமயம், இப்படிப்பட்ட நல்ல படம், மக்கள் கொண்டாடும் படம், மக்களை சரியாக சென்றடையாமல் போய்விடும் ஒரு சூழலும் உள்ளது. போதிய காட்சிகள் கொடுக்கப்படாததால் படம் பார்க்க நினைக்கும் பலர் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். ஒரு நல்லப் படத்திற்கு இப்படி ஒரு நிலை ஏன் என்பது தெரியவில்லை.” தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பல இப்படி சோகமாகவே பேசி கொண்டிருக்க படத்தின் ஹீரோ ஆண்டனி பேசும் போது, “இந்த படம் ஆரம்பிக்கப்பட்டு வெளியாவதற்குள் தமிழகத்தில் மூன்று முதல்வர்கள் மாறிவிட்டார்கள், இரண்டு முதல்வர்கள் தவறிவிட்டார்கள். அந்த அளவுக்கு பல ஆண்டுகளாக இப்படத்திற்காக உழைத்திருக்கிறோம்.” என்று கூறி நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தியவர். தற்போது படம் பெரிய அளவில் ரீக் ஆகியிருக்கிறது என்றால் அதற்கு ஊடகங்கள் தான் காரணம். படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டி எழுதிய அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாலர் தேனி ஈஸ்வர், எடிட்டர் காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு பேசினார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...