தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் சிலர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், சில நடிகைகள் முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம் பிடிக்க பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ரெஜினா கஸண்ட்ரா, தமிழ் சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். காரணம், ‘கண்டநாள் முதல்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், சென்னை பெண் என்பதால் தான். தமிழ் சினிமாவில் மூலம் நடிகையாக அறிமுகமானாலும் தெலுங்கு சினிமா தான் இவரை முன்னணி ஹீரோயினாக்கியது.
இதற்கிடையே, தமிழிலும் பல படங்களில் நடித்து வரும் ரெஜினா, கோடம்பாக்கத்தின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராவதற்காக கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில் ரெஜினா கவர்ச்சியாக நடித்தது பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த ரெஜினா, தற்போது அரவிந்த்சாமிக்கு ஜோடியாகியிருப்பதோடு, அம்மா வேடத்திலும் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம்.
’அச்சமின்றி’, ‘என்னமோ நடக்குது’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் புதுப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாகியிருக்கும் ரெஜினா, அதே படத்தில் தான் ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்கிறாராம். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் அம்மாவாக நடிக்க ரெஜினா நடிக்க சம்மதித்தார் என்று கூறப்பட்டாலும், அதிகமான சம்பளத்தால் தான் அவர் அம்மாவாக நடிக்க ஓகே சொன்னதாகவும் பேச்சு அடிபடுகிறது.
எது எப்படியோ, ரெஜினாவை முதல் முறையாக அம்மாவாக்கிய பெருமை இயக்குநர் ராஜபாண்டியையே சேரும்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...