ஜோதிகா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், லக்ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
மேலும், நடிகர் சிம்பு இப்படத்தில் சிம்புவாகவே நடித்திருக்கிறார். அதாவது எப்.எம் ரேடியோவில் பணியாற்றும் ஜோதிகா திரைப்பட நடிகர் சிம்புவை பேட்டி எடுப்பது போன்ற காட்சி ஒன்று இடம் பெறுகிறது. இந்த காட்சியில் தான் சிம்பு சிம்புவவாகவே நடித்திருக்கிறார். தற்போது அவர் நடித்த காட்சிக்கு டப்பிங் பேசியும் முடித்திருக்கிறார்.
இது குறித்து கூறிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “சிம்பு வரும் காட்சிகளை அவரிடம் சொன்ன போது, அது அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி, அவர் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக நடிக்கிறேன், என்று கூறி நடித்துக் கொண்டுத்தார். டப்பிங் பேசி முடித்த சிம்பு தன்னுடைய காட்சி சிறப்பாக வந்துள்ளதாக் என்னை அழைத்து கூறினார். அவர் இந்த படத்தில் பணியாற்றியது படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி.” என்று தெரிவித்தார்.
தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ‘காற்றின் மொழி’ ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் தான் படத்தின் நாயகி ஜோதிகாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...