விஷால், சூர்யா, பரத், அருண் விஜய் என பல தமிழ் ஹீரோக்கள் 6 பேக்கை வைத்து நடித்திருக்கும் நிலையில் 8 பேக் உடற்கட்டுடன் கோலிவுட்டில் ஹீரோ ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார்.
விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கும் ‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’ படத்தின் மூலம் தான் 8 பேக் உடற்கட்டு ஹீரோ ஆதவா அறிமுகமாகிறார். இப்படத்தில் நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்டின் இசையமைத்திருக்கிறார். விக்னேஷ் ஜெய்பால் பாடல்கள் எழுதியிருக்கிறார். மகிரங்கி கலையை நிர்மாணிக்க, இத்ரீஸ் எடிட்டிங் செய்திருக்கிறார். ஆக்ஷன் பிரகாஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். சுரேஷ் நடனம் அமைக்க, ஆத்தூர் ஆறுமுகம் தயாரிப்பு மேற்பார்வையை கவனித்திருக்கிறார். இணை தயாரிப்பை எம்.செந்தில் பாலசுப்ரமணியம் மேற்கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அழகுராஜ், படம் குறித்து கூறுகையில், “
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறோம்.
டானுடன் நாயகியை தேடி நாயகன் செல்கிறார். நாயகிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதில் நாயகியை கண்டுபிடித்தார்களா இல்லையா? நாயகிக்கு திருமணம் யாருடன் நடந்தது ? என்பதை படு காமெடியாக சொல்லுகிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படம் நிச்சயம் ஒரு மறக்க முடியாத காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...