குட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளமெண்ட் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னைகை’. அறிமுக நாயகன் டிட்டோ நடித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷிதா நடித்திருக்கிறார். இவர் ‘கோலி சோடா 2’ நடித்து இருக்கிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். கூல் சுரேஷ் நகைச்சுவை வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நெல்லை சிவா, டெலிபோன் ராஜ் ஆகியோர் நடிக்க, இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆரோக்கியசாமி க்ளமெண்ட் முக்கியமான மிகப்பெரிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் காதலையும், குடும்பத்தையும் தொலைத்த பலர் இறுதியில் வாழ்க்கையையும் எப்படி தொலைத்து விடுகிறார்கள், என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்த காதல் கதையின் பின்னணியில் சொல்லியிருக்கிறார். அதுமட்டும் இன்றி சமூகவலைதலங்கள் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்தும் இப்படத்தில் பேசியிருக்கும் இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமெண்ட், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களுக்கு பிடித்த வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
காதல், பிரிவு, சஸ்பென்ஸ், திரில்லர் ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் உள்ளடக்கிய கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு தஷி பின்னணி இசை அமைத்திருக்க, இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமெண்ட் பாடல்களுக்கு இசையமைத்திருப்பதோடு, இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார். இளையகம்பன் நான்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆர்.எஸ்.பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜேகப் சாமுவேல் ஆரோக்கியசாமி க்ளமெண்டுடன் இணைந்து இசை பணியை மேற்கொண்டிருக்கிறார். பகத்சிங் எடிட்டிங் உதவியாளராக பணியாற்ற, ராம் முருகேஷ், பவர் சிவா ஆகியோர் நடனம் அமைத்திருக்கிறார்கள். லட்சுமி, டீனா ஆகியோர் இணை தயாரிப்பு பணியை கவனித்துள்ளனர்.
ஊட்டி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்குவதற்கு முன்பாகவே கூவத்தூரில் படமாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னையில் பல லைவ் லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட்டு தயாராக இருக்கும் இப்படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் விரைவில் திரையிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து விரைவில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...