தற்போதைய தமிழ் சினிமாவில் கதைக்கு பற்றாக்குறை இருக்கிறதோ இல்லையோ, ஹீரோக்களுக்கு அதிகமாகவே பற்றாக்குறை இருக்கிறது. தான் வைத்திருக்கும் கதைக்கு பொருத்தமான ஹீரோவை தேடி பிடிக்கும் இயக்குநர்கள், அந்த நடிகர்களிட தாங்கள் எதிர்ப்பார்ப்பதை பெறுவதற்குள் தங்களின் பாதி பாலத்தை இழந்துவிடுகிறார்கள். அந்த அளவுக்கு ஆள் சரியாக இருந்தால், அவரிடம் நடிப்பு இல்லை, நடிப்பு இருந்தால், கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை, என்ற ரீதியிலேயே பல இயக்குநர்கள் தங்களது கதைக்கு தேவையான ஹீரோவை தேடி பிடிப்பதிலேயே சோர்வடைந்து விடுகிறார்கள்.
அப்படி சோர்வடைந்தவர்களுக்காக, அனைத்து ஏரியாவிலும் ஆல் ரவுண்டர் என்ற பெயரோடு கோடம்பாக்கத்திற்கு அறிமுகமாகியிருக்கிறார் ஆதிக்பாபு.
டிஸ்னி இயக்கும் ‘குற்றம் புரிந்தால்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் ஆதிக்பாபு, தனது முதல் படத்திலேயே ஆக்ஷ, காமெடி, செண்டிமெண்ட் என ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான அனைத்து அம்சங்களையும் சிறப்பாக வெளிக்காட்டி ஒட்டு மொத்த படக்குழுவினரிடம் பாராட்டு பெற்றிருக்கிறார்.
மழை, வெயில் என்று பாராமால் இயக்குநர் எந்த இடத்தில் எதை செய்ய சொன்னாலும், ரெடி என்று செய்தவர், அவர் எதிர்ப்பார்த்ததை விடவும் ரொம்ப சிறப்பாகவும் நடித்திருக்கிறாராம்.
இது குறித்து கூறிய இயக்குநர் டிஸ்னி, சிறு முதலீட்டில் உருவாகும் படம் என்பதால் கேரோவேன் உள்ளிட்ட வசதிகள் எனது படத்தில் இல்லை. ஆனால், அதைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காத ஹீரோ ஆதிக்பாபு, எனக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். சென்னையில் உள்ள பல லைவ் லொக்கேஷன்களில் இப்படத்தை படமாக்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட இடங்களில் எந்தவித தயக்கமும் இன்றி நடித்துக் கொடுத்தவர், கதைக்கு எது தேவையோ அதை எந்தவித தயக்கமும் இன்றி செய்தார்.
ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியை காட்டியவர், காதல், செண்டிமெண்ட் போன்ற காட்சிகளிலும் தனது உணர்வுகளை உடல் மொழி மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அறிமுக படம் என்றாலும், படப்பிடிப்பில் எந்தவித குழப்பமும் இல்லாமல், டேக்குகள் அதிகம் வாங்காமல் நடித்த ஆதிக்பாபு, நிச்சயம் இயக்குநர்களின் ஹீரோவாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றார்.
’குற்றம் புரிந்தால்’ படம் ஆக்ஷ த்ரில்லர் ஜானர் என்பதால் படத்தில் எதார்த்தமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. அவற்றை உணர்ந்த ஹீரோ ஆதிக்பாபு டூப் இல்லாமல் தானே ரியலாக செய்தாராம். இப்படி படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல விஷயங்களை ரியலாக செய்தவர், நிச்சயம் தமிழ் சினிமாவின் ஹீரோ பற்றாக்குறையை போக்கும் விதத்திலும், அனைத்து கதாபாத்திரத்திற்கும் செட்டாகும் ஒரு நடிகராகவும் இருப்பார், என்று ‘குற்றம் புரிந்தால்’ பட இயக்குநர் மட்டும் இன்றி அப்படக்குழுவினரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...