சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல விரும்பினாலும் அதில் ஒரு சிலர் தான் வெற்றி பெறுகிறார்கள். பலர் சில காலம் போராடிவிட்டு ஒதுங்கி விட்டாலும், பலர் எப்படியாவது சினிமாத் துறையில் கால்பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் சினிமா மீது உள்ள தீவிர ஆர்வத்தினால், அமெரிக்காவில் இருந்ந்து வந்திருக்கும் தமிழர் தான் ஆரோக்கியசாமி க்ளமெண்ட்.
சென்னை, புரசைவாக்கத்தில் பிறந்து வளர்ந்த ஆரோக்கியசாமி க்ளமெண்ட், கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தார். எல்லாம் ரசிகர்களைப் போல எம்.ஜி.ஆர், கமல் போன்ற நடிகர்களின் படங்களை பார்த்து ரசித்த ஆரோக்கியசாமி, வெறும் ரசிகராக நின்றுவிடாமல், தானும் சினிமாவில் கால்பதிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
லயோலாவில் பி.காம் பட்டம் பெற்றவர், திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். சில காரணங்களால் அது முடியாமல் போனாலும், தனது சினிமா முயற்சியை கைவிடாதவர், தனது வீடு இருக்கும் தெரிவில் வசித்த நடிகர் லிவிங்ஸ்டன் உதவியால் பல படப்பிடிப்புகளுக்கு சென்றவர், அவரின் மூலம் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுகத்தை பெற்றவர், விஜயின் ‘குஷி’ படத்தில் சிறு வேடம் ஒன்றில் நடித்தார்.
இருப்பினும் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்ற தனது கனவுடன் கோடம்பாக்கத்தில் வலம் வந்தவர், ஹேராம், பிரண்ட்ஸ், தீனா, இனிது இனிது காதல் இனிது, மனதை திருடி விட்டால் என பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பிறகு விருமாண்டி படத்தில் கமல்ஹாசனின் நண்பராக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர், அந்த நேரத்தில் தனது மனைவிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அவருடன் அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
அமெரிக்கா சென்றாலும் தனது சினிமா மீது இருந்த ஆர்வத்தை கைவிடாமல், அங்கேயே பல குறும்படங்களை இயக்கினார். பிறகு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியவர் ஒரு வருடம் அமெரிக்காவில் இருக்கும் தனது குடும்பத்தை பிரிந்து, சென்னையில் இருந்தபடியே ‘முடிவில்லா புன்னகை’ படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
தனது சொத்தை விற்று சொந்தமாக இப்படத்தை தயாரித்திருக்கும் ஆரோக்கியசாமி க்ளமெண்ட், இப்படத்தின் மூலம் தனது சினிமா கனவை நிறைவேற்றிக் கொண்டாலும், இப்படத்தை விரைவில் வெளியிட்டு தன்னை ஒரு நல்ல நடிகராகவும், இயக்குநராகவும் நிரூபிப்பதில் ஆர்வமாக உள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...