அஜித்தின் ‘விவேகம்’ நேற்று வெளியான நிலையில், படம் குறித்து மாறுபட்ட விமர்சனக்கள் எழுந்துள்ளன. இருந்தாலும் சில ரசிகர்கள் தங்களை படம் திருப்திப்படுத்தியதாக கூறினாலும், பல ரசிகர்களை படம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே ட்விட்டரில் அஜித்த எருமை என்று விமர்சித்த பாலிவுட் நடிகர் கே.ஆர்.கே, “அஜித் ஜி, பாலிவுட்டில் உங்களை போன்ற வயதான நடிகர் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ் மக்கள் உங்களை எப்படி ஹீரோவாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை. விவேகத்திற்காக வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த பாலிவுட் நடிகரின் இத்தகைய ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் வெகுண்டெழுந்து அஜித்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில் ஒரு விஜய் ரசிகர், “தமிழக மக்கள் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். நாங்கள் அவர் மீது பாசம் வைத்துள்ளோம். வந்து பாருங்க அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை மெர்சல் ஆயிடுவீங்க. நெகட்டிவிட்டியை கண்டுக்காதீங்க தல ரசிகர்களே” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மற்றொரு விஜய் ரசிகரோ, “தலய தொடணும்னா எங்கள தாண்டி தொடு பாக்கலாம் தல மெர்சலான ஹீரோ” என்று தெரிவித்துள்ளார். என்று தளபதி ரசிகர் ஒருவர் பொங்க, மற்றொரு ரசிகர், “விஜய் ரசிகரா உங்களின் கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். தெற்கு பக்கம் அஜீத் சாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் ஒரு ஜென்டில்மேன். அவரின் உருவத்தை பற்றி விமர்சிக்க வேண்டாம்” என்று ட்வீட்டியுள்ளார்.
அஜித் - விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வார்த்தை போர் நடத்திக் கொண்டிருப்பது தான் வழக்கமாக இருக்க, தற்போது அஜித்துக்காக விஜய் ரசிகர்கள் கொடுத்திருப்பது, அஜித் ரசிகர்களுக்கும் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...