ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவிச்சந்திரனுடன் இணைந்து தயாரிக்கும் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது.
விக்ரம் ஹீரோவாக நடிக்குக் இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், அபி ஹாசான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கமலின் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இப்படத்திற்கு ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்கிறார். கலை பணியை பிரேம் நிவாஸ் கவனிக்க, லலிதா ஷோபி நடனம் அமைக்கிறார்.
ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன், பூஜா குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...