குறும்பட துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் மூவிபப் பர்ஸ்ட் கிளாப் குறும்படப் போட்டி, முதல் ஆண்டைக்காட்டிலும், தற்போதைய இரண்டாம் ஆண்டு போட்டியை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்திருக்கிறது. மேலும், முத சீசனைக் காட்டிலும் இரண்டாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளார்கள்.
750 குறும்படங்கள் கலந்துக்கொண்ட இந்த மூவிபப் பர்ஸ்ட் கிளாப் குறும்பட போட்டி - சீசன் 2 வில் வெற்றி பெற்ற குறும்படங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற குறும்பட குழுவினர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும், 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி, ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன், மூவிபப் நிறுவன முதன்மை அதிகாரி செந்தில்குமார், க்யூப் சினிமா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அரவிந்த் ரங்கநாதன், நாக் ஸ்டுடியோஸ் நிர்வாகி கல்யாணம், எடிட்டர் ரூபன், சென்சார் அதிகாரி லீலா மீனாட்சி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.
இந்த குறும்பட போட்டியில் ‘கல்கி’ என்ற படம் முதல் பரிசை வென்றது. இப்படத்தை இயக்கிய விஷ்ணு இடவனுக்கு பரிசு கோப்பையும், ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும் நடிகர் சூர்யா வழங்கியதோடு, தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்டில் கதை சொல்லும் வாய்ப்பையும் வழங்கினார்.
இரண்டாம் பரிசை திரைப்பட நடிகை இந்துஜா நடித்த ‘கம்பளிப்பூச்சி’ படம் தட்டிச்சென்றது. இப்படத்தை வி.ஜி.பாலசுப்ரமணியன் என்பவர் இயக்கியுள்ளார். இவருக்கு ரூ.2 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பிடித்த ‘பேரார்வம்’ குறும்படத்தை இயக்கிய சாரங் தியாகுவுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. ’மயிர்’ என்ற குறும்படத்தை இயக்கிய யோகி மற்றும் ‘குக்கருக்கு விசில்’ போடு என்ற குறும்படத்தை இயக்கிய ஷயாம் சுந்தர் ஆகியோருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, ”ஒரு படம் எடுப்பது சுலபம், ஆனால் நல்லபடம் எடுப்பது போருக்கு போவது மாதிரி அதையம் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி. இந்த விழாவிற்கு வந்திருப்பது ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன். இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம்.. ஆனால் இந்த வயதில் இருப்பவர்கள் தான் இனி வரும் நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்க போகிறவர்கள் .நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப் பருவத்தை பார்த்தவன். ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.
எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும் கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோன்னு நினைத்தால் அதை அப்போதே உடனே சரிசெய்து விட வேண்டும், எங்கேயும் குறைவந்துவிட கூடாது என இயக்குநர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார். அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப்போகிறது.
நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். கம்பளிப்பூச்சி குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, அதை பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.
இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட். 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அந்தப்படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பது தான் சந்தோசம்.
எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக அதை செய்யுங்கள். இந்த மார்க்கெட் ஒப்பனனானது. இதில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம், இரண்டுமே விலைபோகும். ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.” என்றார்.
முன்னதாக பேசிய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், “இப்படி ஒரு நிகழ்வில் எங்களது பங்கும் இருப்பதற்கு மகிழ்ச்சி.. நிறைய திறமையாளர்களால் ஆன்லைன் மூலமாக கூட தங்களது திறமையை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியாகத்தான் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. சீசன்-3 இதைவிட பிரமாண்டமாக இருக்கும்.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...