மூன்றாவது முறையாக இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீமராஜா’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதை போல, சமீபத்தில் வெளியான டிரைலரும் வரவேற்பு பெற்றுள்ளது. படம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே, டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமந்தா, சிவகார்த்திகேயன், சிம்ரன், சூரி, இசையமைப்பாளட் டி.இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் முத்துராஜ், இயக்குநர் பொன்ராம், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “பொன்ராம் சாரின் இயக்கத்தில் நான் நடிக்கும் மூன்றாவது படம் ‘சீமராஜா’. எங்கள் படத்தில் என்ன இருக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால், அதையும் தாண்டி எதாவது புதிதாக காட்ட வேண்டும் என்று பொன்ராம் சார் யோசித்தார். அதன்படி தான் இந்த படத்தில் ஒரு போர்ஷன் வருகிறது. அது ரொம்பவே வித்தியாசமாக இருக்கும், அதே சமயம் எங்களிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் காமெடிக்கும் படத்தில் பஞ்சமிருக்காது.
நான் முதல் முதலில் ராஜா கெட்டப்பில் நடித்திருக்கிறேன். அதுவும் ஒரு தமிழ் மன்னனாக நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதுபோன்ற வாய்ப்புகள் அதிகமாகவும், இவ்வளவு சீக்கிரமாகவும் கிடைக்காத ஒன்று. ராஜா கெட்டப்பில் நான் பேசும் வசனங்கள் எல்லாம் ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறது. இதில் வரும் சண்டைக்காட்சிகள் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்தில் இருக்கும். படத்தில் சண்டை இருக்கும், ஆனால் ரத்தம் இருக்காது, அதில் இயக்குநர் பொன்ராம் ரொம்பவே தெளிவாக இருந்தார்.
நான் யாரையும் போட்டியாக பார்ப்பதில்லை. எனக்கு நான் தான் போட்டி. அப்படி தான் நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். யாரை பார்த்தும் எனக்கு பயமும் இல்லை, பொறாமையும் இல்லை. என் வேலையை நான் சரியாக செய்ய வேண்டும், அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.” என்றார்.
சமந்தா பேசும் போது, “ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது. கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் பொன்ராம், நடிகர் சூரி, நடிகை சிம்ரன் உள்ளிட்ட அனைவரும் பேசினார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...