ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராஜ் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் என்பவர் கடந்த 2010 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
1996 ஆம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தான் எழுதிய தொடர் கதையை, என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குநர் ஷங்கர் ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், என்று ஆரூர் தமிழ்நாடான் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு, அவர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கேட்ட இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், அந்த அபராத தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறும் உத்தரவிட்டவர், விசாரணையை 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...