’வீரம்’ ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று சிவாவுடன் தொடர்ந்து மூன்று படங்கள் இணைந்து பணியாற்றிய அஜித், இனியும் அவருடன் இணைந்து பணியாற்றுவது நல்லதல்ல, என்று அவரது ரசிகர்கள் நினைப்பது மட்டும் இன்றி, தங்களது எண்ணத்தை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு ‘விவேகம்’ அவர்களை ரொம்பவே விரக்தியடைய செய்துள்ளது.
இதற்கிடையே, அஜித்தின் அடுத்த படம் மற்றும் அதன் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகிறது. அந்த இயக்குநர் யார்? என்பது தெரிந்தால் அஜித் ரசிகர்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...” என்ற பாடலை பாடினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
ஆம், அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநரும் சிவா தானாம். விஜயின் ‘மெர்சல்’ படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறதாம்.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...