சென்னையில் இல்லீகலாக நடைபெறும் பைக் ரேஸை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் ‘46’. ’காத்திருப்போர் பட்டியல்’ படத்தில் நடித்த சச்சி மணி மற்றும் ‘பீச்சாங்கை’ பட ஹீரோ கார்த்திக் இருவரும் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி, நவினி ஆகிய புதுமுகங்கள் ஹீரோயினாக நடிக்கின்றனர்.
கலக்கப்போவது யார் உபுகழ் குரேஷி மற்றும் கியான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய இருவரும் வில்லன்களாக நடிக்கின்றனர்.
விஜய் நடித்த ’வேலாயுதம்’, ’ஜில்லா’ மற்றும் ’புலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் டி.ஆர்.பாலா, 46 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் 25 க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.
வினோத்ராஜன் ஒளிப்பதிவை கவனிக்க, மணிக்குமரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'பியார் பிரேமா காதல்' படத்தின் படத்தொகுப்பாளர் ஆவார். கலையை ராமு தங்கராஜ் கலையை நிர்மாணிக்க, ஸ்டன்னர் ஷாம் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். சாண்டி, அசார் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர்.
சென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றிய கதை தான் இந்தப்படம். இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இதுபற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக அதேசமயம் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்கி வருகிறார்கள்.
இந்த இல்லீகல் பைக் ரேஸினால் என்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறியாமல் பணம் மற்றும் ஆர்வம் காரணமாகவே இந்த இல்லீகல் பைக் ரேஸில் பலரும் கலந்துகொள்கிறார்கள். இவர்களின் தவறுகளையும் இந்த திறமையை சிலர் தங்களது சுயலாபத்துக்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்களாம். அந்தவகையில் இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படம்.
இதுவரை இப்படி தெருக்களில் நடக்கும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றி இந்தியாவில் எந்த மொழியிலும் படம் வெளியாகவில்லை. யாரும் தொடாத கான்செப்ட் என்பதால் தான் இயக்குநர் டி.ஆர்.பாலா இந்த கதையை படமாக்க முடிவு செய்தாராம். அந்தவகையில் இவர் தான் இந்தியாவிலேயே இந்த கதைக்களத்தில் படம் இயக்கும் முதல் ஆள் என தாராளமாக சொல்லலாம்.
இப்படம் குறித்து கூறிய இயக்குநர் டி.ஆர்.பாலா, “சென்னையில் நிறைய பைக் மற்றும் ஆட்டோக்களில் 46 என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவர்களெல்லாம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் விரும்பிகள் தான். வேலன்சியோ ரோஸ்ஸி என்கிற பைக் ரேஸ் ஜாம்பவானின் பைக் எண் தான் 46. அதை பற்றிய படம் என்பதாலேயே படத்திற்கும் '46' என்றே டைட்டில் வைத்துவிட்டோம்" என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...