இந்திய சினிமாவின் முக்கியமான நடிகையாக இருந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற தலைப்பில் திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. இதில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தால், ஜெமினி கணேசனின் குடும்பம் இரண்டாக பிரிந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்திரி முதல் முறையாக மது அருந்துவதற்கு ஜெமினி கணேசன் தான் காரணம் என்பது போன்ற காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிக்கு ஜெமினி கணேசனின் மூத்த மகளும் பிரபல மருத்துவமருமான கமலா செல்வராஜ், எதிர்ப்பு தெரிவித்ததோடு, படத்தில் பொய்யான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறினார்.
ஆனால், இதை மறுத்த சாவித்திரின் மகன் சதீஷ், “அம்மாவின் கடைசி நாள்களில் அவங்க தனியா இல்லை. அப்போது எனக்கு 14 வயது என்பதால், நடந்தவை எனக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்ததோ, அதை மட்டுமே காட்டியிருந்தார்கள்'' என்று கூறினார்.
அதேபோல், சாவித்திரியின் மகள் விஜய சாமூண்டீஸ்வரியும், “எங்கள் அம்மா கடைசிக்காலத்தில் கதியில்லாமல் இறந்த மாதிரிதான் எல்லோரும் நினைச்சுட்டிருந்தாங்க. இந்தப் படம் மூலமா, அப்பா கடைசி வரை அம்மாவைக் கைவிடலை என்கிற உண்மை உலகத்துக்குத் தெரியவந்திருக்கு'' என்று கூறினார்.
இப்படி சாவித்திரி படம் குறித்து கருத்து தெரிவித்த அவரதும் மகன் மற்றும் மகள் இருவரும், தனது தந்தை ஜெமினி கணேசனால் தான், தனது அம்மா மது குடிக்க கற்றுக்கொண்டார், என்ற காட்சிக்கு மறுப்பு தெரிவிக்கவும் இல்லை, அது குறித்து பேசவும் இல்லை.
இது ஜெமினி கணேசனின் மூத்த மகள் கமலா செல்வராஜை கோபமடைய செய்திருக்கிறது. இதையடுத்து, சாவித்திரியின் மகனும், மகளும் கூறிய கருத்துக்கு பதில் அளித்திருக்கும் அவர், “என் அப்பாதான் சாவித்திரிக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்ததாகவும், அப்பா வேலையே இல்லாமல் இருந்தது போலவும் படத்தில் வருகிறது. இதைச் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி அனுமதித்தது தவறு. இந்தப் படத்தால் சகோதரிகளாகிய நாங்கள் பிரிந்ததுதான் நடந்திருக்கிறது.
என்னையும், என் அப்பாவையும் கூர்க்கா மற்றும் நாயைவிட்டு விரட்டியடித்தவர் சாவித்திரி. அந்த மோசமான காலத்தை இந்தப் படம் நினைவுப்படுத்திவிட்டது. என் அம்மா சொல்லியபடி என் அப்பாவின் பிள்ளைகளை நான்தான் அரவணைத்து வந்தேன். ஆனால், இனிமேல் விஜி என்னுடைய தங்கை இல்லை. அவளை என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன்'' கூறி தனது கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...