சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டிவி நடிகர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்ப் படங்கள் பலவற்றி நடித்திருக்கும் நடிகர் சித்தார்த்தின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’யாகாவாராயினும் நா காக்க’ போன்று சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் சித்தார்த். இவரும் இவரது மனைவி ஸ்மிரிஜாவும் நேற்றிரவு ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் வீட்டிற்கு வந்த ஸ்மிரிஜா ஒரு அறையில் சென்று கதவை பூட்டியிருக்கிறார், இதனால் சித்தார்த் வெளியே தூங்கியிருக்கிறார்.
காலை வெகுநேரம் ஆகியும் தன்னுடைய மனைவி கதவை திறக்காததால் சித்தார்த் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல் துறை சித்தார்த் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்தால் அவரது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
சித்தார்த்துக்கும், ஸ்மிரிஜாவுக்கும் திருமணமாகை 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...