விஜயின் ‘சர்கார்’ படம் தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டதோடு, சூர்யாவின் என்.ஜி.கே படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த தீபாவளி ரேஸில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அஜித்தின் ‘விஸ்வாசம்’ தீபாவளி ரேஸியில் இருந்து பின்வாங்கி, பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. சரி, விஜயுடன் சூர்யா மோதப்போவது உறுதி என்ற நிலையில், ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பிபு உசரிவர நடைபெறாததால் ’என்.ஜி.கே’ படமும் தீபாவளிக்கு ரிலீஸாகாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனவே, தீபாவளிக்கு விஜயின் ‘சர்கார்’ மட்டும் தான் ரிலிஸாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தனுஷின் ‘என்னை நோக்கி பாயும்’ தோட்ட படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் எப்போது முடிந்து, எப்போது ரிலிஸாகும் என்பது அப்படக்குழுவினருக்கே தெரியாமல் இருந்த நிலையில், நேற்று படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக அறிவித்த கெளதம் மேனன், அதனை கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளார்.
தனுஷுக்கு அண்ணனாக நடிக்கும் இயக்குநர் சசிகுமாரின் போஷனோடு ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கும் கெளதம் மேனன், படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.
கெளதம் மேனனின் இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த கோலிவுட்டுக்கே ஷாக்கான விஷயம் என்றாலும், ரசிகர்களும் இதை எதிர்ப்பார்க்கவில்லை.
எது எப்படியோ, விஜயுடன் தீபாவளி ரேஸியில் தனுஷ் மோதப் போவது உறுதியாகிவிட்டது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...