ரூ.300 கோடி பட்ஜெட்டில் ‘சங்கமித்ரா’ என்ற படத்தை இயக்க இருக்கும் சுந்தர்.சி, ஓவியாவை வைத்து புது படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்திற்காக பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டுவிட்டாலும், படத்தின் முக்கிய கதாபாத்திரமான சங்கமித்ரா வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகை இதுவரை கிடைக்காததால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தை ‘கலகலப்பு-2’ என்ற தலைப்பில் சுந்தர்.சி இயக்க இருப்பதாகவும், அதற்கான கதையை அவர் எழுதிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘சங்கமித்ரா’ படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், ‘கலகலப்பு-2’ படத்தையும் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த விமல், சந்தானம், அஞ்சலி ஆகியோருடன், பிக் பாஸ் மூலம் பிரபலமாக உள்ள ஓவியாவும் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...