அருணாச்சலம் தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஏ.சரவணன் தயாரிக்கும் படத்திற்கு ‘லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி நாடோடிகள் கோபால், கோதண்டம் பரோட்டா முருகேஷ் ஈரோடு முருகசேகர், திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பாலா, இசை மற்றும் பாடல்கள் - செளந்தர்யன், கலை - தேவராஜ், எடிட்டிங் - கோபிகிருஷ்ணா, தயாரிப்பு மேற்பார்வை - சாட்டை N.சண்முகசுந்தரம், ஜெ.பாரதிராஜா, தயாரிப்பு - அருணாசலம் தியேட்டர்ஸ் ஏ.சரவணன்.
இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் சு.சத்தியசீலன் படம் குறித்து கூறுகையில், “இது முழுக்க முழுக்க பேமிலி காமெடி சப்ஜெக்ட். இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பது தான் எங்களது நோக்கம்.
தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார். தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள் ..என்ன மாதிரியான காட்சிகளை கை தட்டி ரசிக்கிறார்கள். என்ன மாதிரியான படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பது அத்துப்படி. அப்படிப்பட்ட சரவணன் தேர்ந்தெடுத்த கதை தான் இந்த ’லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க’ கதை. அந்த குடும்பத்தை பார்ப்பதே தப்பு என்று இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிற பகை.
அப்படிப்பட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்த பையனும் பெண்ணும் காதலித்தால் என்ன ஆகும். முந்தைய தலைமுறை மோதிக் கொள்ள, அடுத்த தலைமுறை காதல் கொள்வது என்பது எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்பது தான் திரைக்கதை.” என்றார்.
பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஈரோடு மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் நடைபெற்றுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...