Latest News :

மனிதனை மனிதனாக மாற்றுகிறவர்கள் ஆசிரியர்கள் - பப்ளிக் ஸ்டார் ஆசிரியர் தின வாழ்த்து
Wednesday September-05 2018

ஆசியர்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டிருக்கும் நடிகரும், சமூக ஆர்வலருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், மனிதனை மனிதனாக மாற்றுபவர்கள் ஆசிரியர்கள் தான், என்று கூறியிருக்கிறார்.

 

இது குறித்து பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

 

செப்டம்பர் 5ம் தேதியாகிய இன்று ஆசிரியர்கள் தினம். நம் ஒவ்வொருவருக்கும் பல ஆசிரியர்கள் .. அதே போல் நம்மில் பல  ஆசிரியர்கள் இருப்பதும் உண்மை என்பதால் என்றும் மாணவனாக இருக்க விரும்பும் என் வணக்கத்தையும், வாழ்த்துகளையும் முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

 

வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். 

 

ஆம்.. கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர். 

 

மிகச் சுருக்கமாக சொல்வதானால் மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. 

 

மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு ஆசிரியர்களும் தனது வழிகாட்டலின் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்த்து அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

 

குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு எகா- நல்லவன்= கெட்டவன் : புத்திசாலி =பைத்தியக்காரன். ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு மட்டும் இலக்கண வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை என்று ஒரு தகவல் கேள்விப்பட்டேன், இவ்வளவு தூரம் ஆசிரியர்களை நினைத்து பெருமைப் பட்டு சிறந்த ஆசிரியர்களை வணங்குகிற அதே நேரத்தில், இன்றைய நாளில் ஆசிரியர் என்ற இந்த பெரும் சிரமமான தொண்டு தொழிலாக ஆகிவிட்டதையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இன்று கொண்டாடப் படும் ஆசிரியர் தினம் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்த நாளின் உயரிய நோக்கம் கெட்டு வெறும் அரசியல் விழாவாக தலைவர்கள் கடமைக்கு வாழ்த்துச் சொல்லும் ஒரு நாளாக ஆகிவிட்டது கொஞ்சம் வேதனையை தருகிறது. 

 

இப்போதைய மாணவர்களின், அவர்களது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும் மாறிவிட்டன. “இவனை எப்படியாவது படிக்க வைங்க… தோலை உரித்தாலும் நான் ஏன் என்று கேட்க மாட்டேன். எப்படியாவது இவன் படித்தால் போதும்” என்று ஒரு காலத்தில் பெற்றோர்கள் சொல்வார்கள். இன்று அந்த அளவுக்கு யாரும் ஆசிர்யர்களை நம்பி விடுவதில்லை – பணம் நிறைய செலவு செய்தால் நல்ல கல்வி கிடைக்கும் என்பதே பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது. மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவதும் நிகழ்கிறது. பல நல்ல ஆசிரியர்கள் வெறுத்துப் போய் இந்த தொழிலை விட்டு வேறு நல்ல வேலைக்கு செல்ல விரும்புவதாகவே ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது.

 

ஒரு மாணவராக அல்லது பெற்றோராக, உங்கள் ஆசிரியர் செலவிட்ட நேரம், முயற்சி, அக்கறை ஆகியவற்றுக்காக அவருக்கு எப்பொழுதாவது நன்றி தெரிவித்திருக்கிறீர்களா? அல்லது நன்றி மடலோ, நன்றி கடிதமோ அனுப்பியிருக்கிறீர்களா?  என்று யோசித்து அதை முடிந்தால் இந் நன்நாளில் செய்து குரு வணக்கம் செய்வோமே என்று கேட்டுக் கொண்டு வணக்கம் தெரிவிக்கிறேன்.

 

இவ்வாறு அவர் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related News

3382

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...