கமர்ஷியல் படம் எடுப்பது சுலபமான விஷயமல்ல, என்று ‘பேய் எல்லாம் பாவம்’ பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசினார்.
தரகன் சினிமாஸ் சார்பில் ஹன்சு பாய் தயாரித்திருக்கும் படம் ‘பேய் எல்லாம் பாவம்’. தீபக் நாராயணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் டோனா சங்கர் ஹீரோயினாக நடிக்க, அப்புக்குட்டி, அரசு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
பிரசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நவீன் சங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கல்யாண், ஏ.வெங்கடேஷ், பேரரசு, தாக்குவார் தங்கம், நடிகர்கள் அப்பு குட்டி, மைம் கோபி, ஜான் விஜய், சினேகன் படத்தின் நாயகி டோனா சங்கர், இயக்குநர் தீபக் நாராயணன் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
இப்படத்தில் அப்புக்குட்டி, அரசு ஆகியோரை தவிர பெரும்பாலான நடிகர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். மேலும், படத்தின் நாயகி டோனா சங்கர், படப்பிடிப்பின் போது இயக்குநர் தீபக் நாராயணனை காதலிக்க தொடங்கியவர், படம் முடிந்ததும் அவரை திருமணம் செய்துக்கொண்டார். படப்பிடிப்பின் போது காதலர்களாக இருந்த இவர்கள், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கணவன் - மனைவியாக கலந்துக்கொண்டார்கள்.
இப்படத்திற்காக தாங்கள் பட்ட கஷ்ட்டம் குறித்து மேடையில் பகிர்ந்துக் கொண்ட இயக்குநரும், ஹீரோயினும் கண்ணீர் விட்டு அழுதது நிகழ்ச்சியியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியது. பிறகு நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், தமிழகர்கள் அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள், இங்கு யார் வந்தாலும் அவர்கள் நல்லபடியாக வாழ்வார்கள், அதுபோல டோனா சங்கர் மற்றும் தீபக் நாராயணனும், அவர்களது இந்த ‘பேய் எல்லாம் பாவம்’ படமும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெறும், என்று வாழ்த்தினார்கள்.
இறுதியாக பேசிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், “கமர்ஷியல் பட இயக்குநர்கள், எதார்த்தப் பட இயக்குநர்கள் என்று தற்போது பிரித்து பார்க்கிறார்கள். எந்த படமாக இருந்தாலும் உழைப்பு என்னவோ ஒன்று தான். கமர்ஷியல் படம் எடுக்கும் இயக்குநர்கள் ஏதோ கால்மேல் கால்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை, அவர்களும் ஸ்பாட்டில் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், காட்சிகளுக்காக சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கமர்ஷியலோ கல்டு படமோ, நல்ல படம் எடுத்தால் தான் சினிமாவை காப்பாற்ற முடியும்.
தற்போது பேய் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பது போல, வியாபர ரீதியாகவும் வரவேற்பு இருக்கிறது. அதனால் ‘பேய் எல்லாம் பாவம்’ என்பதை விட தற்போது பேய் எல்லாம் லாபம், என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மினிமம் கியாரண்டி படமாக பேய் படங்கள் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ‘பேய் எல்லாம் பாவம்’ நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...