மணிரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், நேற்று படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.
சென்னையில் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, ஜோதிகா ஆகியோரை தவிர படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் ஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்தப்பட்டு, மேடை ஏற்றி பேச வைக்கப்பட்டனர். அந்த வகையில், சிம்பு மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த டயானா ஆகியோரும் மேடை ஏற்றப்பட்டனர்.
அப்போது பேசிய சிம்பு, “இங்கே வந்ததற்கு காரணம் நன்றி சொல்ல தான். மணி சாருக்கு நன்றி. நான் அதிகமாக பேசுவேன், அது உங்களுக்கும் தெரியும். ஆனால், இப்போது பேசுவதை விட படம் ரிலிஸாகி பேசும்.” என்று கூறிவிட்டு, மேடையில் இருந்து ஓடிவிட்டார். நிகழ்ச்சி தொகுப்பாளர், அவரிடம் “ஒரு நிமிடம்...” என்று சொல்ல, அதை காதில் வாங்காத சிம்பு, மேடையில் இருந்து ஓடு..ஓடு...என்று ஓடிவிட்டார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...