தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் இரண்டில், மகத் தான் வில்லனாக தெரிந்து வந்த நிலையில், இன்று ஒளிபரப்பாகும் எபிசோட்டில் மும்தாஜின் முகத்திரை கிழிய உள்ளது.
மும்தாஜை, “அந்த பொம்பள மோசமனவ” என்று கூறியதால், கமலிடம் வாங்கிக்கட்டிக்கொண்டதோடு, பிக் பாஸ் போட்டியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார் மகத். ஆனால், அப்போதே மகத், மும்தாஜ் குறித்து பல உண்மைகளை கூறினாலும், அவர் மீது இருந்த கோபத்தால் ரசிகர்கள் அவர் சொல்வதை எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதற்கு ஏற்றவாறு, எப்போதும் அமைதியின் சுரூபமாக இருந்த மும்தாஜ், எதற்கு எடுத்தாலும் சிரித்தபடியே இருந்து மகத்தை கோபப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், மகன் வெளியேற்றிவிட்ட பிறகு மும்தாஜின் சுயரூபம் தெரிய வந்திருக்கிறது. தற்போது எதற்கு எடுத்தாலும் கோபப்படும் மும்தாஜ், அனைவரிடமும் எரிஞ்சி விழுவதோடு, கோபத்தோடு முகத்தை தூக்கி வைத்துக்கொள்ளவும் செய்கிறார். இதனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், அப்போதே மகத் மும்தாஜை பற்றி சொன்னார். அது உண்மை என்று இப்போது தெரிகிறது” என்று சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
மேலும், மகத் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை, என்று கூறியிருக்கும் பல ரசிகர்கள், அவர்கள் இருந்தால், காதல், மோதல், ஊடல் என்று அனைத்தும் இருக்கும், என்றும் கூறியுள்ளனர்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...