சுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பில் ‘96’ மற்றும் ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே, விக்ரமை வைத்து ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஓகே சொல்லியிருக்கிறார்.
இப்படத்தை தமிழ் சினிமாவின் பாரம்பரிய நிறுவனமான மறைந்த நாகி ரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.வெங்கட்ராக ரெட்டி, பி.பாரதி ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்ய அனல் அரசு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பிரபாகர் கலையை நிர்மாணிக்க, ரவிச்சந்திரன், குமரன் ஆகியோர் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, மக்கள் தொடர்பை ரியாஸ் கே.அஹமது கவனிக்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...